;
Athirady Tamil News

ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது!!

0

818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் வடக்கு கடற்பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து 12 உரைகளில் அடைக்கப்பட்டிருந்த 510 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 மற்றும் 37 வயதுடைய இருவரே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மன்னார் வன்காலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 308 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − seven =

*