;
Athirady Tamil News

வன்னியில் வன இலகாவினர் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளனர்!! காதர் மஸ்தான்!!

0

வன்னி பிரதேசத்தில் வன இலாகாவினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளனர் மற்றும் மக்கள் நீண்டகாலம் குடியிருக்கும் காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் கிடைக்காத பிரச்சனைகள், இப்பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி மூலமாக உடனடி தீர்வு! காதர் மஸ்தான்!!

வவுனியாவில் கண்டிவீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயல்திட்டத்திற்கு அமைவாக மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் இலகுவாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், வன்னி பிரதேசத்தில் வன இலாகாவினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள பிரச்சனை மற்றும் மக்கள் நீணண்டகாலம் குடியிருக்கும் காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் கிடைக்காத பிரச்சனைகள், இப்பிரச்சனைகளை ஜனாதிபதி உடனடி தீர்வுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் முகமாக எதிர்வரும் 30 செப்நம்பர் 2020 முன்பாக பொதுமக்கள் தங்கள் காணிகள் தொடர்பான பிரச்சனைகளை பிரதேச செயலாளரிடத்தில் எழுத்துமூலம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவே மக்கள் வாக்களித்துள்ளார்கள், அகவே சிறபான்மை மக்களின் உரிமைகளுக்கு பாதகமில்லாமல் 20 வது திருத்தம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 7 =

*