;
Athirady Tamil News

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கு புதிய நுட்பங்கள் கையாளப்படும்!!

0

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கமானது புதிய நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக நாணய , மூலதன சந்தை மற்றும் தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார் .

“நாடானது பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இது மீள் எழுச்சி பெறும். கடந்த 5 வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட சீரற்ற பொருளாதார செயற்பாடுகளே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும் . கொவிட் -19 தொற்றில் இருந்து நாம் விடுப்பட்டுள்ளோம். இது எமது பொருளாதாரத்திற்கு சாதகமானதாகும்”. என அவர் இதன் போது தெரிவித்தார்.

கடந்த 5 வருடங்களில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடானது வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் சேவை கணக்கானது 90% இற்கும் அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*