;
Athirady Tamil News

ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்!!

0

சட்டவிரோதமாக ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு, நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலுக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப.பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன பொலிஸ் உத்தியோகத்தர்களான துரைசிங்கம் திலகரட்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால், குறித்த நான்கு சந்தேகநபர்கள் நிந்தவூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின், 220 மில்லி கிராம் ஐஸ், 3 கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைதான 45, 30, 28, 17 வயதுடைய சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று (வியாழக்கிழமை) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − two =

*