;
Athirady Tamil News

வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத் தொழில் வாய்ப்பு!!

0

வெளிநாட்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக அவர்களது தகைமைகளைப் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க வேலைவாய்ப்புகளை வெளிநாட்டு பல்கலையில் பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் வழங்கும் வாய்ப்பு இல்லை எனவும் சுமார் 4100 விண்ணப்பங்கள் இத்தகைய பட்டதாரிகளிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கும் சாத்தியம் இல்லை. ஆனால் எம்மிடமுள்ள வெற்றிடங்களுக்கு பொருத்தமான பட்டதாரிகள் இருப்பின் அவர்கட்கு நியமனங்களை வழங்க நாம் எண்ணியுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி இத்தகைய பட்டதாரிகள் கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், கணினித் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*