திடீர் சோதனை நடவடிக்கை – 3,106 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வேறு குற்றச்சாட்டுக்களுக்காக 3,106 பேர் குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.