;
Athirady Tamil News

அநேக மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!!

0

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (என்பிஆர்ஓ) நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 75 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேற்படி மாவட்டங்களில் மழை வீழ்ச்சி தொடர்ந்தால் மண்சரிவு, பாறைகள் வீழ்தல் என்பனவற்றை அம்மாவட்டங்கள் எதிர்கொள்ள நேரிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்வரும் மாவட்டங்களுக்கு மேற்படி நிறுவனம் முதலாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் சூழவுள்ள பிரதேசங்கள்.

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் சூழவுள்ள பிரதேசங்கள்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எல்பாத்த, எஹெலியகொட, இரத்தினபுரி, பெல்மதுளை, குருவிட்ட, அயகம பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் சூழவுள்ள பிரதேசங்கள்.

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் சூழவுள்ள பிரதேசங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 18 =

*