;
Athirady Tamil News

கண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில் பலர் காயம்!!

0

கண்டியில் ஐந்துமாடிக்கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் அருகில் உள்ளவீட்டில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த ஐவர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர்.
கண்டி புவெலிகட பகுதியில் ஐந்துமாடிக்கட்டிடமொன்று இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது.

குறிப்பிட்ட வீட்டில் அவ்வேளை குழந்தை உட்பட ஐவர் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ள காவல்துறையினர் குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டுள்ளனர் மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளன.
ஓன்றரைமாத குழந்தையை மீட்டுள்ளோம் இரு பெண்களை மீட்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − seven =

*