;
Athirady Tamil News

வடமாகாண கடற்படை எற்பாட்டில் கடற்சார் வாரத்தினை முன்னிட்டு சுற்றுலா நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

0

வடமாகாண கடற்படை கட்டளைத்தலைமையகத்தின் எற்பாட்டில் இயற்கைகடற்வளங்களை பாதுகாப்போம். எதிர்கால இளைய சமுதாயத்திற்கான முன்னொடி செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று கருப்பொருளில் முதல்தடவையாக இடம்பெற்ற கடற்சார் வாரத்தினை முன்னிட்டு சுற்றுலா நிகழ்வு இன்று யாழ் காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடக்கு கடற்படை தலைமையகத்தின் கடற்படை இறங்குதுறை பகுதியில் இடம்பெற்றன.

இவ் சுற்றுலாப்பயணம் காங்கேசன்துறை கடற்பகுதியில் இருந்து பருத்தித்துறைதுறை முனை கடற்கரை இறங்குதுறை வரை சென்று மீண்டும் காங்கேசன்துறை இறங்குதுறைக்கு வந்துடைந்தது.

இந்த பயணத்தின் நோக்கமானது கடற்வழிமார்க்கமாக வரும் போதைப்பொருள்கள் தொடர்பான வருகையினை கட்டுப்படுத்தல்,சுற்றுலா பயணத்தின் போது பிளாஸ்டிக்,பொலீத்தீன் வெற்றுபேணிகளை கடற்பரப்பில் போடுவதை நிறுத்தல்,இயற்கை கடற்வளத்தின் முக்கியம் போன்றசெயற்பாடு வலியூறுத்தும் வகையில் கடற்சார்வார சுற்றுலாப்பயணம் இடம்பெற்றன.

இவ் நிகழ்வில் ஆரம்பித்துவைப்பதற்காக வடக்கு கடற்படைகட்டளைத்தலைமையத்தின் பிரதிகட்டளைத்தளபதி ஏ.பி.ஜெயவர்த்தன,உதவி நெறிப்படுத்தும் கட்டளைத்தளபதி,ஆர்.ஆரிய ரட்ண,உள்ளிட்ட உயர் கடற்படையினரும் இதன்போது கலந்துகொண்டனர்.

இங்கு கடற்பயணநிகழ்வு ஆனது யாழ் மாவட்ட செயலக,சுங்கத்திணைக்கள,சிறைச்சாலை, ஆகிய உத்தியோகத்தர்கள்,உள்ளிட்ட மாணவர்கள்,ஊடகத்துறையினர் என்போர்கள் சும்மார் 150 பேர்கள் இதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − seven =

*