;
Athirady Tamil News

கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்; ஆனால்…? நிபந்தனை விதிக்கின்றார் மணி!!

0

கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைக்க தயார். ஆனால், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் மீதான எனது குற்றச்சாட்டுக்களுக்கும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சட்டத்தரணி வி. மணிவண்ணன்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்படுவது தொடர்பில் பதிலளிக்கும் கடிதத்தை மணிவண்ணன் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன். ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது ஒழுக்காற்று விசாரணையை நடத்தும் முன் அனுபவமும் கட்சி சாராத சுயாதீன அதிகாரியாக உள்ள குறைந்தது மூவர் கொண்ட குழு முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அத்தோடு, தன் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெற வேண்டும் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார். இதே வேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும்” என்றும் மணிவண்ணன் கேட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + seventeen =

*