;
Athirady Tamil News

20வது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்ட ஐக்கியதேசிய கட்சி நடவடிக்கை!!

0

20வது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
20வது திருத்தத்தில் உள்ள பாதகமான அம்சங்கள்மற்றும்தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கான தொடர்நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன இந்த நிகழ்ச்சிதிட்டங்களை முன்னெடுப்பார்.
தற்போதைய அரசாங்கம் தனது சில நடவடிக்கைகள் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கின்றது , நாடாளுமன்ற ஜனநாயகத்தினை அச்சுறுத்துகின்றது, மக்களின் சுதந்திரங்களை மீறுகின்றது பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி கைதுசெய்கின்றது, சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என ஐக்கியதேசிய கட்சிகருதுகின்றது என கட்சி வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்தஅரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜனநாயவிரோத நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாககட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − nine =

*