;
Athirady Tamil News

மனுக்களை மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியும் – சி.வி.கே.சிவஞானம்!! (வீடியோ)

0

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது நீக்கக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள் அந்த கடிதம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ஜனாதிபதி எந்த விதத்திலும் நீதிமன்ற விடயத்தில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்திருந்தார் இதற்கு பதிலளிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிவிகீசிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பொதுவான அரசியல் தீர்மானம் ஒன்றினை எடுத்து போலீசார் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறும் பட்சத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தல் நினைவு கூற முடியும் அது எந்த விதத்திலும் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தலையிடுவதாக கருத முடியாது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − seven =

*