;
Athirady Tamil News

அரச வங்கிகள், அவற்றுடன் இணைந்த நிறுவனங்கள் மீது இதுவரை 100 முறைப்பாடுகள்!!

0

நல்லாட்சியின் போது அரச வங்கிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவுக்கு இதுவரை 100 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வங்கிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளனன.

இது குறித்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் முறைப்பாடுகளை முன் வைப்பதற்கான காலமும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு அறிவித்துள்ளது.

பிரதான அரச வங்கிகளில் ஜனவரி 8 ஆம் திகதி 2015 வரை இடம்பெற்ற முறைக்கேடுகள், அந்தந்த நிறுவனங்களில் உள்ள நிதியத்திற்கு விரோதமாக மற்றும் வங்கி சட்டத்திற்கு முறனாக இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட முறைக்கேடுகள் தொடர்பில் கண்டறிய நால்வர் அடங்கிய குழு ஒன்று நியயமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டய கணக்காளர் சுசந்த டி சில்வா, ஓய்வூப்பெற்ற மேலதிக கணக்காய்வாளர் டபிள்யூ. பிரேமரத்ன ஆகியோர் இந்த குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களாவர்.

நிதியமைச்சின் உறுப்பினர் ஒருவர் அந்த குழுவின் செயலாளராக உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*