;
Athirady Tamil News

உலகநாடுகளின் உள்விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவது குறித்து கோத்தபாய கருத்து!!

0

உலக நாடுகளின் உள்விவகாரங்களி நாடுகள் தலையிடாமலிருப்பதை ஐநா உறுதி செய்யவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகளின் 75வருடத்தை முன்னிட்டு பொதுச்சபையில் வீடியோ இணைப்பு மூலம் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

உலகின் எந்த நாடும் சிலரின் நன்மைக்காக பணயம்வைக்கப்படாத நிலை காணப்பட்டாலே ஐக்கியநாடுகளுக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகச்சிறந்த நிலையை அடையமுடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலகம் பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்ற இந்த தருணத்தில் நாங்கள் நாடுகளின் சமமான இறைமைக்கு ,பிரதேச ஒருமைப்பாட்டிற்கு அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடப்படாமைக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கவேண்டும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 14 =

*