;
Athirady Tamil News

20வது திருத்தத்தின் நகல்வடிவில் இடம்பெற்றுள்ள விடயங்களை ஜனநாயக சிந்தனை கொண்டவர்களால் ஏற்க முடியாது-ஐக்கிய மக்கள் சக்தி!!

0

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்தத்தினை எதிர்ப்பது என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை தெரிவித்துள்ளார்.
உத்தேச திருத்தத்தை முழுமையாக ஆராய்ந்துள்ளோம் அதில் உள்ள ஒரு விடயத்தை கூட எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சட்டமூலம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரேமாதிரியான கருத்துள்ள சக்திகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் செயற்படுவதைதவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்து 20வது திருத்தம் குறித்து ஆராய்ந்தனர் என தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல 19வது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் பலவீனப்படுத்துவதால் அதனைஎதிர்ப்பது என தீர்மானித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பு பேரவையை நீக்கிவிட்டு நாடாளுமன்ற பேரவையை கொண்டுவருவது,சுயாதீனஆணைக்குழுக்களை பலவீனப்படுத்துவது,நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பது போன்ற யோசனைகளை ஜனநாயக நோக்கம் கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதுஎன அவர்தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − ten =

*