;
Athirady Tamil News

பாராளுமன்றம் வருகின்றார் ஞானசார தேரர்; தேசியப் பட்டியலுக்கு அவரது பெயர் முன்மொழிவு!!

0

அப்பே ஜன பலய கட்சியின் மாநாட்டில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் மாநாட்டிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை அப்பே ஜன பலய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் வெதினிகம விமலசார தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல்கள் ஆணையகத்திடம் தேரர் தனது சொந்தப் பெயரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு முன்மொழிந்ததை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுபோல் விமலதிஸ்ஸ தேரரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவும் இதன்போது எடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − eight =

*