;
Athirady Tamil News

அமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும், எதிர்கொண்ட சவால்களும்” எனும் தலைப்பிலான கல்நுரையாடல்!! (வீடியோ, படங்கள்)

0

”அமரா பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அடைந்துகொண்ட வெற்றிகளும், எதிர்கொண்ட சவால்களும்” எனும் தலைப்பிலான கல்நுரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர் பாணுயா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளம் சவால்கள் மற்றும் அவர்கள் அடைந்த வெற்றிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்கின்ற அடையாளம் காணப்பட்ட சவால்கள் தொடர்பிலும், அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தலைமைதாங்கிய விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இணைப்பாளர் பாணுயா கருத்து தெரிவிக்கையில்,
போரின்போதும் போரிற்கு பின்னரும் பெண்கள் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் நோக்குடனும். அனைத்து தரப்புடனும் உறவை பேணிவரும் அமரா ஒன்றியங்கள் இன்று அமைச்சுகளுடனான கலந்துரையாடல்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பிரதேச மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதன்போது காணி பிரச்சினைகள், காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைகள், பெண்களின் சமூக பாதுகாப்பு, அவர்களது சுகாதார பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்விசார் பிரச்சினைகள், பெண்களிற்கு எதிரான வன்முறைகள், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் படும் அல்லல்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் வெளிவராத பாலியல் லங்சம் மற்றும் சுரண்டல்கள் போன்ற விடயங்கள் போன்றவற்றில் பெண்கள் அவற்றுக்கான நீதி கிடைக்கவும் தீர்வு பெறவும் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயங்கள் தொடர்பில் மாவட்டத்தில் தீர்மானம் எடுக்கக்கூடிய பதவியில் உள்ளமாவட்ட அரசாங்க அதிபராகிய உங்களிற்கு நாம் சொல்லி அறிய வேண்டியதில்லை. உங்களால் முடிந்தவரை பெண்களிற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுங்கள் என நாங்கள் வேண்டுகின்றோம். தனியே கொள்கைகளும், தேசிய செயற்திட்டங்களும், ஆவணப்படுத்தல்களால் மாத்திரம் எமது பெண்களிற்கு நீதி கிடைக்கப்போவதில்லை. அவற்றை செயற்படுத்த அழுத்தம் கொடுங்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − eight =

*