;
Athirady Tamil News

20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை-ஜேவிபி!!

0

20வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் தீவிரபிரச்சினைகள் உருவாகியுள்ளன என ஜேவிபி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
உத்தேச திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமித்த குழு சமர்ப்பித்தஅறிக்கையின் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகின்றது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றம் இந்த சட்டமூலம் சரியானதா தவறானதா என ஆராயாது என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசமைப்பில் இடமுள்ளதா என்பது குறித்தேநீதிமன்றம் ஆராயும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*