;
Athirady Tamil News

கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்!!

0

அரசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 27 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 22 உறுப்பினர்களைக் கொண்ட கோபா குழு நியமிக்கப் பட்டது.

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் ஏனைய நிறுவனங்களின் நிதி நடவடிக்கை களை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசாங்கம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி ஒழுங்கமைப்பு ஆகியவற் றை கண்காணிக்கும் அதிகாரம் கோபா குழுவிற்கு வழங் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eleven =

*