;
Athirady Tamil News

31 விருதுகளை வெற்றிகொண்ட ஈழத்து கலைஞரின் “கயிறு” திரைப்படம்!

0

தென்னிந்தியா திரைப்படம் ஈழத்தமிழர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி 31 விருதுகளை வெற்றிகொண்ட கயிறு முழு நீளத் திரைப்படம் நாடாளாவிய ரீதியிலுள்ள 17 திரையரங்குகளில் வெளியிட்டு வைக்கப்பட்டு மக்களின் பேராதாவுடன் வெற்றி நடைபோட்டு வரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக வவுனியாவிலுள்ள கயிறு திரைப்பட ரசிகர்கள் மன்ற இளைஞர்களினால் இன்று தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர் .

ஈழத்துக்கலைஞரான குணா கதாநாயகனாக நடித்துள்ள இரண்டாவது திரைப்படமான கயிறு தென்னிந்தியாவில் திரைப்படமாகப்பட்டுள்ளது . இன்றைய நிலையில் தென்னிந்தியாவிலுள்ள பல திரைப்பட கலைஞர்களுக்கு பேராதரவினை வழங்கி வரும் இலங்கை ரசிகர்கள் எமது படைப்பில் கலை காச்சார விழுமியங்களை உள்ளடக்கிய ஈழத்து வவுனியா மண்னை நேசிக்கும் மைந்தன் குணா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்திற்கு பேராதரவு வழங்கி ஈழத்துக்கலைஞர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் இப்படத்தின் இயக்குநர் கணேஸ் தயாரிப்பாளர் எஸ் . ஆர் குணா ஆகியோரின் படைப்பில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் திரையிடப்பட்டு கிட்டத்தட்ட 31 விருதுகளை வெற்றி கொண்டு இந்த மண்ணுக்கும் ஈழத்துக் கலைஞர்களுக்கும் மதிப்பையும் ஆதரவினையும் பெற்றுத்தந்துள்ளது .

இவ்வாறான ஒரு படைப்பாற்றலில் திரையிடப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள ஈழத்து ரசிகர்கள் இளைஞர்கள் ஒன்றிணைந்து இப்படத்தை வெற்றியடையச் செய்யவேண்டிய பொறுப்பு எம்மத்தியிலுள்ளது . எனவே வவுனியா திரையரங்கில் வெள்ளிகிழமை தொடக்கம் 10.30 , 2.30 , 6.30 ஆகிய மூன்று நேரங்களில் கயிறு திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது .

எமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து உலக அரங்கில் கலைஞர்களுக்கு பேராதரவினை வழங்குமாறு ஈழத்து ரசிகர்கள் மன்றம் சார்பாக மேலும் தெரிவித்துள்ளனர் .

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − one =

*