;
Athirady Tamil News

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!! (படங்கள்)

0

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(22) காலை கோவிட் தொற்றுக் காரணமாக எளிமையான முறையில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நேற்றுக் காலை-07.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரியின் ஸ்தாபகர் அமரர்- முதலியார் அ. அத்தியாரின் நினைவுத் தூபிக்கு ஸ்தாபகரின் குடும்ப உறவுகள் சார்பாக ந. சிவகுமார், ஸ்தாபகரின் பூட்டியும், ஆசிரியையுமான திருமதி. இராஜேஸ்வரி சிவகுமார், கல்லூரி அதிபர் உள்ளிட்டோர் மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் நினைவுத் தூபிக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கல்லூரியின் முன்பாக அமைந்துள்ள ஸ்தாபகரின் உருவச் சிலைக்குப் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரும், ஸ்தாபகரின் பூட்டனுமான திருநாவுக்கரசு முத்துக்குமார் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஸ்தாபகரின் பூட்டி திருமதி. இராஜேஸ்வரி சிவகுமார் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ஸ்தாபகரின் குடும்ப உறவுகள் சார்பாகப் பேனாக்கள் அன்புப் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − three =

*