;
Athirady Tamil News

சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய திட்டம் – நாமல்!!

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு இளைஞர் கழக அதிகாரிகள் மற்றும் இளம் பாராளுமன்ற உறுப் பினர்களை இணைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்த திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இளைஞர் சேவை கள் மன்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் சுற்று சூழலில் பாதிப்பு ஏற்படு வதா கத் தெரிவிக்கும் தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்காகக் குறித்த இளைஞர் களை நியமித்துள்ளனர்.

சகல கிராமங்களும் உள்ளடங்கும் வகையில் இளைஞர் களை நியமித்துக் குறித்த கிராமங்களின் சுற்று சூழலில் சேதம் ஏற்படுமானால் அது தொடர்பாக அமைச்சகத்திற்கு அறிவிப்பதோடு , இதுபோன்ற சுற்றுச் சூழல் அழிப்பை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + eleven =

*