;
Athirady Tamil News

தேசியபாதுகாப்பு பேரவையின் கூட்டத்துக்கு என்னை அழைக்காததால் முக்கியதகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை- பூஜித்!!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் என்னைக் கலந்து கொள்ள விடாது தடுத்தார். நான் ஒரு பொலிஸ் மா அதிபராக இருந்தும் எனது கடமை தொடர்பாக முக்கிய தகவல்களை உறுதிப்படுத்த எனக்கு ஒரு வழியும் இருக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று(23) நடைபெற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் கடந்த 2018 ஒக்டோபர் முதல் தான் பங்கெடுக்கவில்லை என்றும் பொலிஸ் மா அதிபராக தனக்கு இது கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் 2018 ஒக்டோபர் 23இல் நடக்கவிருப்பதாக எனக்குத் தெரிந்திருந்தது. ஆயினும் இந்த அமர்வு குறித்து முதல் நாளோ அல்லது அந்த நாளின் காலையிலோ எனக்கு அறிவிக்கப்படவில்லை. பின் நான் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ணவுக்கு அழைத்து கூட்டமொன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என விசாரித்தேன். அதற்கு வைத்தியரட்ணஇ முன்னாள் ஜனாதிபதி சிறிசேன என்னை கூட்டத்துக்கு அழைக்க வேண்டாமென அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார் என ஜயசுந்தர கூறினார்.

எவ்வாறாயினும் கடந்த 2018 நவம்பர் 3இல் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி அன்று நியமனம் பெற்றார். அதே நாளில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை இடமாற்றுமாறு என்னிடம் சிறிசேன கோரினார் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜயசுந்தரவிடம் தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் உங்களை அழைக்காதது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என வினவியதற்கு அவர் பதிலளிக்கையில் அந்த நேரத்திலிருந்துதேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில்இடம்பெற்றவிடயங்கள் குறித்து எனக்கு தெரியப்படுத்தப்படவில்லை இன்னொரு சிரேஸ்ட அதிகாரியைஅவர்கள் அழைத்தது எனக்கு கவலையளித்தது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 5 =

*