;
Athirady Tamil News

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தவறுகளைச் சீரமைக்க 4 நாள்கள் அவகாசம்!!

0

2020 ஆம் ஆண்டில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்ய மாணவர்களுக்கு நான்கு நாள்கள் கால அவகாசம் வழங்குவதற்கான முடிவை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை முதல் 30ஆம் திகதி புதன்கிழமைவரை மாணவர்கள் தவறுகளைச் சீர்செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அந்தக் காலகட்டத்தில் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை சுட்டெண்ணை சமர்ப்பிக்கலாம், மேலும் விண்ணப்பத்தில் உள்ளிடப்பட்ட தரவை சீராய்வு செய்து திருத்தலாம் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − nine =

*