;
Athirady Tamil News

43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு!! (படங்கள்)

0

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 43 பேருக்கு 572வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் டி எம் பி பி டசனாயக்கவினால் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12.09.2020 அன்று குறிதத் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தெரிவு இடம்பெற்றுள்ளது. பீட் சிற்றியில் பணிபுரியக்கூடியவாறு குறித் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தெரிவு குறித்த தினத்தன்று கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. குறிதத் நேர்முகத்தெரிவிற்காக 377 பேர் வருகை தந்திருந்த நிலையில் அவர்களில் 43 பேர் தகுதி அடிப்படையில் வேலைக்காக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளிற்கான தொழிற்சாலை வசதிகள், வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் குறித்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் முயற்சியால் 43 வறிய குடும்பங்கள் தொழில் வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 6 =

*