;
Athirady Tamil News

முன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்!!

0

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 200 மெய்க்காப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 70 பாதுகாப்பாளர்களே வழங்கப்பட்டுள்ளதால் இது நியாயமற்றது என்றார். பிரேமதாச தனது மெய்க்காப்பாளர்களை குறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்குமான மெய்க்காவலர்கள் வரையறுக்கப்படும் என உள்விவகார , வீட்டு விவகார, பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்று(24) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*