;
Athirady Tamil News

கேரளாவில் 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்புக்கு ஆளான வாலிபர்..!!

0

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 6, 324 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு சுவாச கோளாறு, உடல்வலி போன்றவை இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே நேரம் அவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்படுவதில்லை.

ஆனால் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த சாவியோ ஜோசப்(வயது38) என்ற வாலிபருக்கு 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது பற்றி சாவியோ ஜோசப் கூறியதாவது:-

வளைகுடா நாடான மஸ்கட்டில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது. என்னுடன் வேலை பார்க்கும் நபர் ஒருவர் சீனாவுக்கு சென்று திரும்பினார். அவர் மூலம் எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கருதினேன். அதன் பிறகு ஜூன் மாதம் மஸ்கட்டில் இருந்து சொந்த ஊர் வந்தேன்.

ஜூலை மாதம் மீண்டும் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்காக ஜூலை 22-ந்தேதி திருச்சூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். ஆகஸ்டு 11-ந்தேதி கொரோனா பாதிப்பு நீங்கியது. எனவே ஆஸ்பத் திரியில் இருந்து வீடு திரும்பினேன்.

கடந்த 5-ந்தேதி மீண்டும் எனக்கு சுவாச கோளாறும், உடல் வலியும் ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே 3-வது முறையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். கடந்த 11-ந்தேதி எடுத்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. எனவே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சூர் வாலிபருக்கு கடந்த 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதை அறிந்து வியந்தனர்.

இது பற்றி மாநில உயர்மட்ட குழுவைச் சேர்ந்த டாக்டர் இக்பால் கூறும்போது, வாலிபரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே இதற்கான காரணம் குறித்து கூறமுடியும், என்றார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராஜன் காபர்கடே கூறும்போது, இது குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம், என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − six =

*