;
Athirady Tamil News

பீகார் சட்டமன்ற தேர்தல் அட்டவணை- முதல்கட்ட தேர்தலுக்கு அக்.1ம் தேதி மனு தாக்கல் ஆரம்பம்..!!!

0

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளிலும், மூன்றாவது கட்டமாக 15 மாவட்டங்களில் 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதற்கட்ட தேர்தல்:

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்- அக்டோபர் 1
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – அக்டோபர் 8
மனுக்கள் பரிசீலனை – அக்டோபர் 9
மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் – அக்டோபர் 12
வாக்குப்பதிவு -அக்டோபர் 28
வாக்கு எண்ணிக்கை – நவம்பர் 10

இரண்டாம் கட்ட தேர்தல்:

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்- அக்டோபர் 9
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – அக்டோபர் 16
மனுக்கள் பரிசீலனை – அக்டோபர் 17
மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் – அக்டோபர் 19
வாக்குப்பதிவு -நவம்பர் 3
வாக்கு எண்ணிக்கை – நவம்பர் 10

மூன்றாம் கட்ட தேர்தல்:

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்- அக்டோபர் 13
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – அக்டோபர் 20
மனுக்கள் பரிசீலனை – அக்டோபர் 21
மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் – அக்டோபர் 23
வாக்குப்பதிவு -நவம்பர் 7
வாக்கு எண்ணிக்கை – நவம்பர் 10.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + six =

*