;
Athirady Tamil News

திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

0

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

சாவகச்சேரி சிவன் கோவிலில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் திட்டமிட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து, மாற்று ஏற்பாடு திட்டமிடப்பட்டது. அந்த மாற்று ஏற்பாட்டை முன்னரே அறிவித்தால் பொலிசார் தடை ஏற்படுத்துவார்கள் என்பதால், அந்த இடம் குறித்து பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையிலேயே இன்று காலை 8 மணி முதல் சாவகச்சேரி சிவன் கோவிலில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நினைவேந்தலிற்கு யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை, மல்லாகம் பொலிசார், நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

அதேபோல, மட்டக்களப்பிலும் உண்ணாவிரதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கும் நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 6 =

*