;
Athirady Tamil News

உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்!!

0

மரப்பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டிருக் கும் இந்நேரத்தில், இந்த நன்மையைப் பயன்படுத்தி உயர்தர மர உற்பத்தியை உற்பத்தி செய்ய மரத்தொழில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான அரசாங்க நிதியுதவியை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் இவ்வாறு செய்யாமல் விடும் பட்சத்தில் அமர்வதற்கு வெளிநாட்டு நாற்காலி இல்லை? உள் நாட்டு நாற்காலி இல்லை? என்ற நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ, கடுபெத்த பகுதியில் இலங்கை தொழில் துறை மேம்பாட்டுச் சபையில் பல அரச நிறுவனங்கள் ஒன்று கூடிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், மரத்தொழில் தொழிலாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் சிறப்புக் கவனம் பெறாத பல்வேறு தொழில் களை முறையாகக் கவனித்துக் கொள்வதற்காக ஜனா திபதி கோத்தாபய ராஜபக்ஷ கைத்தொழில் அமைச்ச கத்தை உருவாக்கி அதன் கீழ் மூன்று இராஜாங்க அமைச்சுகளை உருவாக்கியுள்ளார்.

ஒன்று முதன்மையாக இந்த நாட்டில் புடவை உற்பத் தியாளர்களை மேம்படுத்துவதாகும். மற்றொன்று நகைத் தொழிலை மேம்படுத்துவதாகும். மேலும், இராஜாங்க அமைச்சர் பிரசன்னா ரணவீராவின் கீழ், தச்சு, மட் பாண்டங்கள் உள்ளிட்ட சிறப்புத் தொழில்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக உரிய கவனம் செலுத்தப்படாமல் உள்ள உள்ளூர் பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கு நமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், கோவிட் – 19 தொற்றுடன் எழுந்த சிறப்புச் சூழ் நிலைகளில் ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த முடிவுகள் நமது உள்ளூர் தொழில்கள் மிக உயர்ந்த மட்டத்தில் முன்னேறத் தேவையான நிலைமைகளை உருவாக் கியுள்ளனர்.

ஏனைய நாடுகளிலிருந்து எங்கள் நாட்டுச் சந்தையில் படையெடுத்த பல தயாரிப்பு பொருட்களை நாங்கள் தயாரிக்கக்கூடிய தயாரிப்புகளாகும் . ஆனால், அது தடு மாற்றத்திற்கு ஒரு காரணம் என்னவென்றால், குறித்த சந்தையில் சீனா அல்லது வேறு எந்நாட்டிலிருந்து வரும் பொருட்கள் மலிவாக உள்ளமையால் எங்களால் போட்டியிட முடியவில்லை.

அந்த கேள்விக்கு இன்று ஏதோ ஒரு வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சாதகமான வாய்ப்பை முறையாகப் பயன் படுத்தும் போதுதான் இந்த நிலைமை தொடரும். அல்லது இந்த நாட்டின் நுகர்வோர் ‘வெளி நாட்டில் நாற்காலிகள் இல்லை, இலங்கையில் நாற்காலிகள் இல்லை’ என்ற சூழ் நிலை ஏற்பட்டால், நுகர்வோர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மாற்றி அமைக்கும் நிலைக்கு அரசாங் கம் தள்ளப்படும்.

அதனால் தான் உயர்தர தயாரிப்புகளை வழங்கப் பல அரசு நிறுவனங்களுடன் இந்த உரையாடலைத் தொடங்கி னோம். இந்த விவாதத்தைப் பலனளிப்பதற்கு இராஜாங்க அமைச்சரும் நானும் தொடர்ந்து கலந்துரையாடி நடை முறை முடிவுகள் கிடைக்கும் வரை தொடர்ந்து முன் னோக்கிச் செல்வோம் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + seventeen =

*