;
Athirady Tamil News

பால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த!!

0

நியூஸிலாந்திலிருந்து அதிகளவில் பால் மா ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கை, அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கை பாலில் தன்னிறைவு பெறும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை 26 ஆம் திகதி நவலப்பிட்டியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பால் மா இறக்குமதியை முற்றா நிறுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பசுக்களில் பால் கறக்கின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் நூற்றுக்கு 35% மட்டுமே செய்கிறோம். ஏனைய அனைத்தும் இறக்கு மதி செய்யப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப் புள்ள பால் மா இறக்குமதி செய்கிறோம். வெளி நாட்டி லிருந்து உட்கொள்ளும் தேசமாக மாறியுள்ளது.

நாங்கள் மில்கோவுடன் இணைந்து, கால்நடைகளுக்குத் தேவையான உதவிகள், உணவுகள், புல் மற்றும் கால் நடைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பணி யாற்றுவோம். 3 ஆண்டுகளுக்குள் பாலில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டிற்குப் பால் இறக்குமதி செய்வதை முற்றாக நிறு த்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நியூஸிலாந்தில் இருந்து அதிக பால் மா இறக்குமதி செய்யும் நாடு இலங் கை தான் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*