;
Athirady Tamil News

கொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை !!!

0

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் சிறந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் உலகின் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து முதல் 10 நாடுகள் இங்கே:

01. சீனா

02. இலங்கை

03. கானா

04. தென்கொரியா

05. மியான்மார்

06. அவுஸ்திரேலியா

07. தாய்லாந்து

08. நியூஸிலாந்து

09. வியட்நாம்

10.கம்போடியா

கொரோனா வைரஸுக்கு பதிலளிக்கத் தவறியதாக அடையாளம் காணப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பார்சிலோனா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + twelve =

*