;
Athirady Tamil News

துறைமுகபணியாளர்களுடன் தொடர்பிலிருந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

0

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய எண்ணெய் கப்பலில் வந்த 17 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை பிசிஆர்சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.
திருகோணமலையில் எண்ணெய் கப்பல் தரித்து நின்றவேளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனை முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கப்பலில் இருந்தவர்களைஇறங்குவதற்குஅனுமதிக்காத அதிகாரிகள் கப்பலை இந்தியாவுக்கு திருப்பிஅனுப்பியுள்ளனர்.
இதன் பின்னர் குறிப்பிட்ட கப்பல் கொழும்புதுறைமுகத்துக்கு சென்றது குறித்தும் துறைமுக ஊழியர்கள் சிலர் கப்பலில் ஏறியது குறித்தும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தங்கள் குடும்பத்தவர்களுடன் தொடர்பிலிருந்த ஐவர் உட்பட கப்பலில் ஏறிய அனைவரையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இவர்களுடன் தொடர்பிலிருந்த 34 பேரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
இவர்கள் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது ஒருவாரத்துக்குள் தெரியவரும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக சமூகபரவல் நிகழ்வதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*