;
Athirady Tamil News

அரசாங்கம் வடகிழக்கை அச்சுறுத்தி தென்னிலங்கையை ஏமாற்றுகின்றது – சபா குகதாஸ்!!

0

அரசாங்கம் வடகிழக்கை அச்சுறுத்தி தென்னிலங்கையை ஏமாற்றுகின்றது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்..
ஆளும் அரசாங்கம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மிது அடக்குமுறைகளை அச்சுறுத்தல்களை நீதித் துறைமூலமும் இராணுவ இயந்திரத்தின் மூலமும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையே பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஐனநாயக நாட்டில் ஐனநாயக ரீதியாக தமிழர்கள் தமது அரசியல் விடையங்களை மேற்கொள்ள அரசாங்கம் நீதித்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தின் மூலம் அடக்குதல் நாட்டின் இன நல்லிணக்கத்திற்கும் நிலையான சமதானத்திற்கும் நல்லெண்ண சமிக்கையாக அமையவில்லை.

உண்மையாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை அரசாங்கம் அரசியல் ரீதியாகவே கையாள வேண்டும் ஆதுவே நீண்ட நிலையான இன ஐக்கியத்திற்கும் நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் வழி சமைக்கும் மாறாக வட இலங்கையை அச்சுறுத்தலில் வைத்திருத்தல் நாட்டின் ஸ்த்திர தன்மைக்கு மேலும் பின்னடைவை இராஐதந்திர ரீதியாக உருவாக்கும்.

வடகிழக்கில் சண்டித்தன அரசியலை முன்னெடுத்து தென்னிலங்கையில் இனவாதிகளை வைத்து முரண்பாடான ஊடக அறிக்கைகளை நாளாந்தம் வெளியிட்டு வெளிநாட்டு இராஐதந்திரிகளுக்கு ஒரு கருத்தும் அதற்கு எதிர்மாறாக தென்னிலங்கை மக்களுக்கு பிறிதொரு கருத்தையும் கூறி ஏமாற்றி வருகின்றனர் .

இவ்வாறான ஆளும் அரசாங்கத்தின் நிலை எதிர்காலப் பயணத்திற்கு ஆரோக்கியமாக அமையவில்லை என தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*