;
Athirady Tamil News

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி, தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பம்!!

0

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 36 வர்த்தகர்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் தேங்காயை விற்பனை செய்த 59 வர்த்தகர்கள் மீது இன்று சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்காக நாடுமுழுவதும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகள் நடவடிக்கைகளில் 95 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.

305 வர்த்தகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + five =

*