;
Athirady Tamil News

3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மஞ்சள் தொகை மீட்பு!!

0

மன்னார் கொண்டச்சி பிரதேசத்தில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மஞ்சள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மஞ்சள் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 946 கிலோ கிராம் மஞ்சள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 11 =

*