;
Athirady Tamil News

பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

0

“பசுமைப்புரட்சி” என்ற கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த இருதினங்கள் இடம்பெற்றது.

பிரபாகரன் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜீவன் அவர்களினால் குறித்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டு பாடசாலைகளில் நாட்டப்பட்டது.

நேற்றயதினம் தெற்குவலயத்திற்குட்பட்ட பாசலைகளிற்கும் இன்று வடக்குவலயத்தை சேர்ந்த
பாடசாலைகளுக்கும் குறித்த மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதனை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளுக்கும் 10000 வேப்பமரக்கன்றுகள் எதிர்காலத்தில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் சுயீவன் இதன்போது தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + fourteen =

*