;
Athirady Tamil News

சஜித் பிரேமதாச கூட்டத்தில் கல்வீச்சு சம்பவம் – இருவர் கைது!!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட் டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட போது, அடையாளம் தெரி யாத குழுவினர் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டிருந் தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை மற்றொருவர் கைது செய்யப்பட்டதாக இரத் மலானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று இரத்மலானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித் துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + twelve =

*