;
Athirady Tamil News

இளையோர்களே அவதானம்! நீதி அமைச்சில் வேலை பெற்றுத் தருவதாக பண மோசடி!!

0

நீதி அமைச்சில் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக வழங்கப்பட்ட போலி அழைப்புக் கடிதத்துடன் அமைச்சுக்கு நேற்றும் இன்றும் பல இளையோர் சென்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சுமார் 45 இளையோர்கள் இவ்வாறு போலி அழைப்புக் கடிதத்துடன் நீதி அமைச்சுக்கு நேர்முகப் பரீட்சை என நம்பிச் சென்ற நிலையில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நீதி அமைச்சினால் பதவிநிலைகளுக்கு நியமனங்கள் வழங்கும் எதுவித ஏற்பாடும் அமைச்சில் இல்லையென இளையோர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

17 ஆயிரத்து 500 ரூபாய் தொடக்கம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை பணத்தைப் பெற்ற ‘சமந்த’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், தொலைபேசியூடாக இளையோரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − nine =

*