;
Athirady Tamil News

தேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை எழுதப்போகின்றாராம்!!

0

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் களிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பாடத்திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்திருந்தார். புத்தகம் ஒன்றை எழுதத் திட்டமிருப்பதாலேயே முன்னாள் பிரதமர் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + fourteen =

*