;
Athirady Tamil News

அனல் பறக்க நடைபெற்ற கரப்பந்தாட்டம்!! (படங்கள்)

0

தெல்லிப்பளை மின்னலடியாக்கி விளையாட்டுக்கழகம் நடத்திய யாழ் மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் ஏ பிரிவு அணிகளுக்கான இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கழக மைதானத்தில் மின் ஒளியில் விறுவிறுப்போடு நடைபெற்ற ஏ பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி மோதியது.

இதில் இரண்டுமே பல பொருந்திய அணிகள் என்பதால் மைதானம் ரசிகர் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. அனல் பறக்க நடந்த ஆட்டத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி 3.0 என்ற செட் கணக்கில் கலைமதி விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி சம்பியனானது. போட்டியின் ஆட்டநாயகனாக ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி வீரன் சிந்துஜன் தெரிவு செய்யபட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*