வவுனியாவில் கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்!! (படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் பரிபாலசபையினரின் ஏற்பாட்டில் ஸ்ரீ லக்மி நரசிங்கர் கல்வி சமூக நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்வி மற்றும் சமூக மட்டத்தில் வறுமையில் வாடும் மக்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்டமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த நிதியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆலயத்தின் பரிசாலனசபை தலைவர் கோ. ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றதுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், கு. திலீபன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் ஸ்ரீனிவாசன், இந்து கலாசார உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட வர்த்தக பிரமுகர்கள் சமூக நலன் விரும்பிகள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ் ஆரம்ப நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் முதற்கட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”