கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!

“மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன்.”
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு சற்று முன்னர் விடுத்த செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செய்தியின் விபரம் வருமாறு;
கொவிட் தடுப்பிற்காக அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவடைந்ததே நோய்த்தொற்று மீண்டும் பரவியதற்கான அடிப்படை காரணமாகும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொவிட் நோய்த் தடுப்புக்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட செயற்பாடுகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றாமை பெரும் குறைபாடாக அமைந்து விட்டது என காவற்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் – அது தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, மக்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கைகளை ஊடகங்களும் குறைத்துக்கொண்டுவிட்டிருந்தன.
கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.
தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு – கோவிட் பரவல் மேலும் நிகழ்வதனைத் தடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு – அனைத்து ஊடகங்களுக்கும், எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன்.
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!
மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!
கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!
ஊரடங்கு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – அரசாங்கம்!!
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன!!
யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த நடவடிக்கை!!
ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி!!
திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!!