;
Athirady Tamil News

கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; சஜித்துக்கு பவித்திரா பதில்!!

0

கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் படும்.நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து நாட்டை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் எந்த தகவல்களையும் மறைக்கவில்லை . சிலர் இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது போல் அரசாங்கம் அரசியல் தேவைக்காக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்று காலையும் ஜனாதிபதியின் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது எங்கிருந்து இந்த தொற்று முதல் நோயாளருக்கு வந்துள்ளது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

4800 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களோடு தொடர்புபட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அதற்கிணங்க 1816 பேருக்கு சமூகத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதுபோல நோய் சந்தேகத்துக்குரிய அவர்களும் சாதாரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் ஒரே வாகனத்தில் கொண்டு சொல்லப்படுவதில்லை. தொற்று இனங்காணப்பட்ட நோயாளிகள் அம்புலன்ஸ் மூலமே ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் தங்குவதற்கு தனியான ஹோட்டல்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நோயாளிகளுடன் தங்கவைக்கப்படுவதில்லை.

பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 303160 பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடளாவிய அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஒரு நாளில் குறைந்தது பத்து பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு உரடங்குச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சில விடயங்களை கூறினர்.நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து நாட்டை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.அவ்வாறு செய்வது அரசாங்கத்திற்கு சுலபம் என்றாலும் அவ்வாறு செயற்படப் போவதில்லை.பம் என்றாலும் அவ்வாறு செயற்படப் போவதில்லை என தெரிவித்த அமைச்சர், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்கானப் படும்அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றார்.

தனிமைப்படுத்தப்படாத இந்தியர்கள் ஆடை தொழிற்சாலைக்கு சென்றதுதான் வைரசிற்கு பரவலிற்கு காரணமா? மறுக்கின்றது இராணுவம்!!

புதிய பொலிஸ் பேச்சாளராக அஜித் ரோகண!!

பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!

கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!

பவித்ரா வன்னியாராச்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் என்ன ?

தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக ஆடைதொழிற் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தலைமறைவு- இராணுவத் தளபதி!!

ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!

மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!

சற்றுமுன் – புதிதாக 124 பேருக்கு கொரோனா!!!

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா காணப்பட்டது என தெரிவித்த மருத்துவர் முக்கிய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்!!

கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து!!

ஊரடங்கு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – அரசாங்கம்!!

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு!!

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா!!

புங்குடுதீவைச் சேர்ந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன!!

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் 20 பேருக்கு பிசிஆர் சோதனை!!

யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி!!

திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!!

கொரோனா தற்போதைய நிலமை தொடர்பில் இராணுவ தளபதியின் கருத்து!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*