முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்!!

மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்..
மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த புதன் கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு எழுந்த மானமாக பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது.
அதற்கமைவாக குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெண்னப்புவ பகுதியை சேர்ந்த மன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மான வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நபர் பணியாற்றிய மற்றும் நடமாடிய தொடர்புகளை பேணிய இடங்கள் மற்றும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கட்டட நிர்மாண பணிகளை மேற்கொண்ட ஆயர் இல்லத்தில் கொரோன தொற்று அபாயம் காணப்படலாம் எனும் அச்சத்தில் முழு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதுடன் தனிமைபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நபருடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் கொரோனா அச்சம் என சந்தேகிக்கப்படுகின்ற பலருக்கு இன்றைய தினம் மேலதிக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
சிகிச்சையளிக்க வைத்தியசாலைகளில் இடமில்லை- வைத்தியர் சுதத் சமரவீர!!
பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
பொலிஸ் அனுமதி வழங்கும் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!!
கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை!!
ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்; தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய பொலிஸ்!!
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!!
மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன்- ஹர்சா கருத்து!!
கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் – அஜித் ரோகண !!