இன்ஸ்டா அழகி கம்பேக்.. ஒருவழியா மேக்கப் போட்ட ஷிவானி.. கமலே ரெக்வஸ்ட் பண்ணி பாட சொல்லிட்டாரே! (வீடியோ, படங்கள்)

வீக்கென்ட் வந்துடுச்சு அகம் டிவி வழியே அகத்துக்குள் வந்து கமல் சார் நம்மள பார்க்கப் போறாரு என அனைத்து போட்டியாளர்களும் பக்காவா டிரெஸ் பண்ணிட்டு வந்து உட்கார்ந்து இருக்காங்க.. ஆனால், ரசிகர்கள் கண்கள் பூரா 5 மணி பஸ் ஷிவானி நாராயணன் மேல தான்.
அப்பாடா இன்னைக்குத் தான் இன்ஸ்டாகிராமில் பார்ப்பது போல பள பளன்னு இருக்காரு என சமூக வலைதளங்களில் பொங்கி வழிகின்றனர்.
மேக்கப் போடாம
இன்ஸ்டாகிராமில் அழகு டாலாக ஷிவானியை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் எண்ணெய் வடியும் டால்டா டின்னாக பார்த்து ஷாக்காகி விட்டனர். கொஞ்சமாச்சும் மேக்கப் போட்டுட்டு வாம்மா என சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து ஓட்டினார்கள். அவங்களுக்கு எல்லாம் இன்னைக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா தரிசனம் கொடுத்து விட்டார்.
அழகு சிலை
கை வைக்காத ஜாக்கெட் போட்டுக்கிட்டு, சேலை கட்டிக் கொண்டு இன்ஸ்டாகிராமில் எப்படி அழகா போஸ் கொடுப்பாங்களோ அதே மாதிரி இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஷிவானி ஜொலிக்கிறார். மற்ற போட்டியாளர்களும் செம சூப்பரா டிரெஸ் பண்ணிட்டு இருக்காங்க, பாலாஜி வேட்டி சட்டையில் கலக்குறாரு.
ஷிவானியை பாட சொன்ன கமல்
வேல்முருகன், சூப்பர் சிங்கர் ஆஜித் என பாடகர்கள் வீட்டுக்குள் போட்டியாளர்களாக உள்ள நிலையில், மற்றொரு குரல் பாட கேட்டேன் என கமல்ஹாசன் சொன்னதும், அத்தனை போட்டியாளர்கள் பார்வையும் ஷிவானி பக்கம் கேமராக்கள் போல திரும்பின. மேலும், கமல் ரெக்வஸ்ட்டை கேட்ட உடனே ஷிவானி மீண்டும் “கண்மணி அன்போடு” பாடலை பாடி அசத்தினார்.
புரோக்கன் ஹார்ட்
மேலும், கமல் பேசும் போது, வந்த ஒரே நாள்ல அதிகமா அந்த பொண்ணுக்கு எல்லாரும் புரோக்கன் ஹார்ட் கொடுத்துட்டீங்களே எனவும் ஷிவானிக்கு சப்போர்ட் பண்ணி பேச, சார் நான் சீக்கிரமா மிங்கிள் ஆகல, அது தான் பிரச்சனையே, இப்போ கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சி இருக்கேன்னு அழகா பேசும் போதே, ரசிகர்கள், நீ கலக்கு செல்லம் என வழிந்து விட்டனர்.
இதே போல
கமல் சார் வரும் போது மட்டுமல்ல, இதே போல எப்பவுமே மேக்கப் போட்டுக்கிட்டு, தங்க சிலையாகவே காட்சி தா ஷிவானின்னு அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் எல்லாம் ஒற்றைக் காலில் நின்று தவம் இருக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால், இயல்பா வீட்டில் இருக்கும் போது, சாதாரணமாத் தானே இருக்க முடியும், போன சீசன்ல யாஷிகா ஆனந்தை எல்லாம் பார்க்கல, நிஜத்தையும் ரசிங்க என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss