களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா!!

களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவங்கொட பகுதியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை (12) தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் என்ன!!
மன்னாரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்ட வெண்ணப்புவயைச் சேர்ந்த ஐவருக்கே கொரோனா!!
புதிய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் – சவேந்திர சில்வா!!
பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!
வைத்திய ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பளு : நிறுவனத் தலைவர்!!
கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – இலங்கையின் வேண்டுகோளிற்கு சீனா பதில்!!
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
கொரோனா வைரஸ்- கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!!