;
Athirady Tamil News

தோல்நோய்களுக்கு மருந்தாகும் வெப்பாலை!! (மருத்துவம்)

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தொற்றுநோய்க்கு மருந்தாக அமைவதும், வயிற்றுப்போக்கை நிறுத்தக் கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று, வெள்ளைப்போக்கு பிரச்னையை போக்கவல்லதுமான வெப்பாலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

சாலையோரங்களில் காணப்படுவது வெப்பாலை மரம். இதன் காய்களின் முனை ஒட்டியதாக இருக்கும். இதன் இலைகளில் பால் வரும். வெப்பாலை பூக்கள் மல்லியை போன்று காணப்படும். இதன் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்துகிறது.வெப்பாலை இலைகளை பயன்படுத்தி வயிற்றுபோக்குக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெப்பாலை இலைகள், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதனுடன் பனங்கற்கண்டு, நீர்விடாமல் பொடித்து வைத்திருக்கும் வெப்பாலை இலை அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கழிச்சல், சீதக் கழிச்சல், பெருங்குடல் வலி பிரச்னை குணமாகும். மலக்குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று, எரிச்சல், வெள்ளைபோக்கு பிரச்னை குணமாகும். ஈரலை பலப்படுத்தும், செரிமானத்தை சீர்படுத்தும்.

வெப்பாலை இலைகளை பயன்படுத்தி உலர்ந்த சருமம், பொடுகை போக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெப்பாலை இலைகள், தேங்காய் எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், வெப்பாலை இலைகளை ஊறவைத்து 3 நாட்கள் வெயிலில் காயவைக்கவும். ஊதா கலராக மாறும் இந்த தைலத்தை எடுத்து தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.மற்றொரு முறையிலும் தைலம் தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயுடன், நீர்விடாமல் பொடித்து வைத்திருக்கும் வெப்பாலை இலைகளை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். பொடுகு இருப்பவர்கள் இந்த தைலத்தை 10 நிமிடங்கள் தலையில் ஊறவைத்து குளித்துவர பொடுகு பிரச்னை இல்லாமல் போகும். பொடுகினால் உண்டாகும் நமைச்சல் குறையும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட வெப்பாலை பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கும் தன்மை உடையது. அரிப்புடன் கூடிய தோல்நோய், சொரியாசிஸ் ஆகியவற்றுக்கு மருந்தாகி பயன் தருகிறது. வறண்ட சருமத்தை மாற்றுகிறது. ரத்தத்தை சீர்செய்யும் தன்மை கொண்டது. வெப்பாலை தோல்நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. இது, சித்த ஆயுர்வேத மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உஷ்ணத்தை சமன்படுத்த கூடியதாக விளங்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலையை பயன்படுத்தி நலம் பெறலாம். ஆசனவாய் அருகில் கொப்புளங்களை ஏற்படுத்தும் பவுத்திரம் நோயை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பொடுதலை கீரை, உளுந்தம் பருப்பு. செய்முறை: தோட்டங்களில், வயல்வெளிகளில் காணப்படும் பொடுதலை கீரையை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் உளுந்தம் பருப்பு வறுத்து சேர்த்து சமைத்து சாப்பிடும்போது பவுத்திரம் விலகிப்போகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*