;
Athirady Tamil News

நெறிக்கட்டியை குணப்படுத்தும் நொச்சி !! (மருத்துவம்)

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுக்களில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்க கூடியதும், நெறிக்கட்டியை சரிசெய்யவல்லதும், உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை கொண்டதுமான நொச்சியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.சாலை ஓரங்களில், வயல்வெளியில் காணப்படுவது நொச்சி. பல்வேறு மருத்துவ குணங்களை உடைய இது உடல் தேற்றியாக விளங்குகிறது. காய்ச்சலை தணிக்க கூடியதாக விளங்குகிறது.

வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றி இருமலை போக்கும். வியர்வையை உண்டாக்கி காய்ச்சலை தணிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.நொச்சி இலைகளை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை தணிக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நொச்சி இலைகள், வெல்லம்.செய்முறை: ஒரு கைப்பிடி அளவுக்கு நொச்சி இலைகள் எடுக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உடல் சூடு தணியும். சிறுநீர் தாரையில் ஏற்படும் அடைப்பை நீக்குகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கி உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. உடலுக்கு பொலிவை தரும் மருந்தாகிறது.

நீலநிற பூக்களை கொத்தாக கொண்ட அற்புதமான மூலிகை நொச்சி. இதன் இலைகளை பயன்படுத்தி நெறிகட்டியை சரிசெய்யும் மேல்பூச்சு தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நொச்சி இலைகள், விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு விளக்கெண்ணெய் ஊற்றவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் நொச்சி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி நெறிக்கட்டியின் மீது பூசிவர நெறிக்கட்டி மறைந்து போகும். வீக்கம், வலி சரியாகும். எவ்விதமான நெறிக்கட்டிகளுக்கு இது மருந்தாகிறது.

மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நொச்சி இலைகள், விளக்கெண்ணெய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் நொச்சி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும்போது இதை மேல்பற்றாகவும், ஒத்தடம் கொடுத்துவந்தால் மூட்டுவலி, வீக்கம் சரியாகும். எவ்வித வலியாக இருந்ததாலும் அதை போக்க கூடிய மருந்தாக இது விளங்குகிறது.

நொச்சியை மேல்பற்று மருந்தாக பயன்படுத்தும்போது வலி, வீக்கம், நெறிக்கட்டுக்கு மருந்தாக விளங்குகிறது. உள் மருந்தாக பயன்படுத்தும்போது நீர் பெருக்கியாகவும், இருமல், உடல் உஷ்ணத்தை தணிக்கிறது. இதை பயன்படுத்தி நன்மை பெறலாம்.
கழுத்து, முதுகு பகுதியில் ஏற்படும் தேமலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேமல் இளம் வயதினருக்கு அதிகம் வரும். இதற்கு புங்கன் இலை, தேங்காய் எண்ணெய் மருந்தாகி பயன் தருகிறது. புங்கன் இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இதை தேமல் மீது பூசிவர சில நாட்களில் தேமல் மறைந்து தோல் அழகை பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*