;
Athirady Tamil News

மாஸ்டர் பிளான் போட்ட மொட்டை.. மடக்கிப் பிடித்த ரம்யா பாண்டியன்.. காட்டிக் கொடுத்த பிக்பாஸ்! (வீடியோ, படங்கள்)

0

கடந்த வார பிக் பாஸ் சீனை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் பிரம்மாஸ்திரமாக எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் என்கிற பூதத்தை பிக் பாஸ் இறக்கி உள்ளார். இதுல யாருக்கு லாபாமோ இல்லையோ தெரியாது, ஆனால், மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தியின் முழு முகமூடியும் கிழிந்து தொங்கியது.

விளையாடுறேன் விளையாடுறேன்னு சொல்லி வில்லத்தனம் பண்ணும் அவரை பிக் பாஸே டிவி போட்டு சக போட்டியாளர்களுக்கு காட்டிக் கொடுத்தார்.

மாஸ்டர் பிளான்

போட்ட மொட்டை எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் யாருக்கும் கிடைக்காமல் தானே ஆட்டையை போட வேண்டும் என மாஸ்டர் பிளான் போட்டு சனம் ஷெட்டி முதல் கேப்ரில்லா வரை ஒவ்வொரு போட்டியாளராக வெளியே அனுப்பினார் சுரேஷ் சக்கரவர்த்தி. கடைசியாக அவருடைய அந்த பிளானை கண்டு பிடித்து விட்டார் முதல் வார தலைவி ரம்யா பாண்டியன்.

மடக்கிப் பிடித்த ரம்யா

பாண்டியன் சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, கேப்ரில்லா என ஒருத்தர் பின் ஒருவராக திட்டம் போட்டு வெளியேற்றினார் சுரேஷ் சக்கரவர்த்தி. கேப்ரில்லாவை வெளியே அனுப்பும் வரை அவரது கேம் பிளான் தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன், கடைசியாக அவரது பல்ஸ் அறிந்து கொண்டு, இதுவரை செம கேடித்தனமாக விளையாடி இருக்கீங்க என்பதை போட்டுடைத்தார்.

ஆஜீத்தை கார்னர் செய்த சுரேஷ்

எபிசோடின் ஆரம்பத்திலேயே ஆஜீத்தை சுரேஷ் சக்கரவர்த்தி கார்னர் செய்த காட்சியையே இந்த கிளைமேக்ஸுக்குத் தான் என்பது தெளிவாக தெரிகிறது. ஆஜீத் சின்ன பையன், அவன் வீக் கன்டெஸ்டன்ட் நீயும் நானும் சண்டை போடலாம். அவனை வெளியே அனுப்பு என மொட்டை சுரேஷ் வாதம் பண்ண அதனை ஆஜீத்தும், ரம்யாவும் ஏற்கவே இல்லை.

விடாது கருப்பு

விடாப்பிடியாய், நான் வெளியேற மாட்டேன் ஆஜீத்தை தான் வெளியே அனுப்ப வேண்டும் என கடைசி வரை போராடினார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவருடைய மாஸ்டர் பிளானை நன்கு புரிந்து கொண்ட ரம்யா பாண்டியன், அதனை ஆஜீத்துக்கும் புரிய வைத்து, சுரேஷ் சக்கரவர்த்தியை அந்த அறையை விட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.

புறம் பேசுதல்

சுரேஷ் சக்கரவர்த்தி தான் ஒரு வீக்கான போட்டியாளர் என்றும், வயசானவன், எனக்குத் தான் அந்த பாஸ் வேண்டும் என்று ரொம்பவே சைல்டிஷ்ஷாக விளையாடினார். பின்னர், வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது. ரியோ ராஜின் முகத்திரையை அவரையே கிழிக்க வைத்தது. அனிதாவுடன் சண்டை போட்டது.

நாரதர் வேலையை நல்லா பண்ண

பிக் பாஸ் அனிதா பெயரே தெரியாமல் நடித்தது, சனம், ரேகா என பலருடன் போட்ட சண்டைகளை வெளிப்படையாக ரூமில் இவர் பேச, பிக் பாஸ் டிவியில் அதை ஒளிபரப்பி மற்ற போட்டியாளர்களை தூண்டிவிடும் நாரதர் வேலையை இன்று நன்றாகவே செய்தார். சுரேஷ் சக்கரவர்த்தியின் ஒட்டுமொத்த சுய ரூபமும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அப்பட்டமாக தெரிய, ரியோவின் மூஞ்சில் கடுகு வெடித்தது.

பழி தீர்த்த ஆஜீத்

ரம்யா பாண்டியன் சொன்னதை புரிந்து கொண்ட சூப்பர் சிங்கர் ஆஜீத், எனக்கா ஆர்டர் போடுற கெழவா, இப்போ இந்த ரூமை விட்டு வெளியே போ என்கிற ரேஞ்சில் ரம்யாவுக்கு சப்போர்ட் பண்ணி, சுரேஷ் சக்கரவர்த்தியை அந்த அறையை விட்டு வெளியேற்றினார். இந்த வாரம் இன்னும் இதுபோல பிக் பாஸ் நிறைய செய்வார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 4 =

*